ரஷ்யாவின் ஆர்காஙெல்ஸ்க் பிராந்திய நிர்வாகத்தின் துணைத் தலைவர் விளாடிமிர் அனன்யேவ், கடந்த மார்ச் 29-ம் தேதி நடைபெற்ற ஐஸ் ஹாக்கி போட்டியில் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென உயிரிழந்தார். 66 வயதான அனன்யேவ், அரசு அணிக்காக விளையாடி வந்தார். போட்டி துவங்கி சில நிமிடங்களிலேயே அவர் ஐஸில் கால் தவறி கீழே விழுந்தார்.
அவர் சுயநினைவு இழந்த நிலையில் இருந்ததால், உடனடியாக மருத்துவ குழுவினர் அழைக்கப்பட்டனர். சம்பவம் நேரலை ஒளிபரப்பாக இருந்ததால் பலரும் அதிர்ச்சியில் உறைந்தனர். மருத்துவ குழுவினர் விரைந்து வந்தாலும், உயிர் காக்கும் முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்தன என ரஷ்ய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அனன்யேவ், ரஷ்யாவின் பிராந்திய பிரோக்குறோருக்கான அலுவலகத்தில் சுமார் 25 ஆண்டுகள் பணியாற்றியிருந்தார். சமீப காலங்களில், அவர் பிராந்திய நிர்வாகத்தில் துணைத் தலைவராகவும், பொதுநிலைத்துறை மேம்பாட்டு இயக்குநராகவும் செயல்பட்டு வந்தார்.