உலகின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் நிறுவனஸ்தருமான எலான் மஸ்க், தற்போது அமெரிக்க அரசின் செயல்திறன் துறை (DODGE) தலைவர் பதவியில் உள்ளார். முன்னாள் அதிபர் டிரம்புடன் நெருக்கமான உறவை பேணும் மஸ்க், அடிக்கடி சர்ச்சைகளிலும் சிக்கிக் கொள்வது வழக்கமாகிவிட்டது. அவர் பல்வேறு பெண்களுடன் உறவில் இருந்ததாக கூறப்படும் நிலையில், இதுவரை மொத்தம் 14 குழந்தைகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில், ஒரு மகள் திருநங்கை என தன்னை அடையாளப்படுத்தியதால் கோபத்தில் அந்த மகள் இறந்து விட்டதாக மஸ்க் கூறியிருப்பது பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், எழுத்தாளர் ஆஷ்லே செயின்ட் கிளார், எலான் மஸ்க்கின் குழந்தையை பெற்றெடுத்ததாக சமீபத்தில் அறிவித்துள்ளார். அதற்க்கு பதிலளித்த மஸ்க், “அந்தக் குழந்தை என்னுடையதா என்று எனக்குத் தெரியவில்லை. இருந்தாலும், நான் அவளுக்கு தெரிந்து கொள்ளாமலேயே 2.5 மில்லியன் டாலர்கள் (ரூ.21.4 கோடி) கொடுத்திருக்கிறேன். மேலும், ஆண்டுக்கு 500,000 டாலர்கள் (ரூ.4.3 கோடி) அனுப்புகிறேன்” என அதிர்ச்சி தரும் விளக்கத்தை தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அரசுத்துறைகளில் எலான் மஸ்க்கின் தாக்கம் அதிகரித்து வருவதை எதிர்த்து, அவரது டெஸ்லா நிறுவனத்தை புறக்கணிக்க வேண்டியதாக சமூக வலைதளங்களில் வலியுறுத்தல் அதிகரித்துள்ளது. இதனிடையே, ஆஷ்லே தனது டெஸ்லா காரை விற்றுவிட்டதாக அறிவித்ததையடுத்து, மனம் நொந்துபோன மஸ்க் இந்த கருத்துகளை வெளியிட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன. மேலும் இந்த விவகாரம் அவரது தனிப்பட்ட வாழ்க்கை மீதான மேலும் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.