உத்திர பிரதேச மாநிலத்தில் இளம்பெண் ஒருவர் புல்லட் பைக்கில் ஆபத்தான வகையில் ஸ்டண்ட் செய்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் காவல்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளனர். அதாவது உத்திர பிரதேச மாநிலம் பிரஜோபாத் பகுதியில் இளம் பெண் ஒருவர் ஈந்தோன் பாலம் பகுதியில் உயிருக்கு ஆபத்தான வகையில் ஸ்டண்ட் செய்தார். பின்னர் 2 கைகளையும் விட்டபடி ஹிந்தி பாடல் ஒன்றுக்கு ரீல்ஸ் எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த நிலையில் அந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி நெட்டிசன்கள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் காவல்துறையினர் அந்தப் பெண்ணின் மீது அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர். அதன்படி ஸ்டண்ட் செய்த இளம் பெண்ணிற்கு ரூ .22000 அபராதம் விதித்ததோடு, ஸ்டண்ட் செய்ய பயன்படுத்திய புல்லட் பைக்கினை பறிமுதல் செய்தனர். அதோடு பைக்கின் உரிமையாளரை காவல் நிலையத்திற்கு வரவழைத்து மன்னிப்பு கடிதம் எழுத வைத்தனர். மேலும் இதுபோன்ற அபாயகரமான, உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் விதமாக பைக் ஸ்டண்ட்களில் ஈடுபடுவோர் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.