மீண்டும் காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்... குழந்தைகள் உட்பட 27 பேர் பலி!
Dinamaalai April 04, 2025 10:48 PM

காஸா பள்ளி மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 27 பேர் பலியாகி இருப்பதாக அந்நாட்டு சுகாதாரத்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். ஹமாஸ் அமைப்பினர் பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்துள்ள இஸ்ரேலியர்களை விடுவித்து, காஸாவை விட்டு வெளியேறும் வரை போரை மேலும் தீவிரப்படுத்துவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.


இதனைத் தொடர்ந்து, ஒரு மாதத்துக்கு மேலாக  காஸாவுக்குச் செல்லும் உணவு, எரிபொருள், உதவிகள் ஆகியவற்றை இஸ்ரேல் தடுத்தி நிறுத்தி வைத்துள்ளது.இந்நிலையில், காஸா நகரத்தின் புறநகர்ப் பகுதியான துஃபாவில் செயல்பட்டு வரும் பள்ளியின் மீது வியாழக்கிழமை இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது.

இதில், 27 பேர் படுகொலை செய்யப்பட்டதாகவும்  முதல்கட்டமாக 14 குழந்தைகள், 5 பெண்களின் உடல்கள் மீட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  மேலும், 70 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து இருப்பதாகவும்  கூறப்பட்டுள்ளது. முன்னதாக,  நள்ளிரவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பதாகத்  தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.