சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ஜாஷ்ப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜகன்நாத் சிங் சித்தார்த். இவர் ட்ரீம் 11 ஃபேண்டஸி கிரிக்கெட் போட்டியில் முதலிடத்தைப் பெற்று ரூபாய் 1 கோடி பரிசுத்தொகையை வென்றுள்ளார். கடந்த மார்ச் 23ஆம் தேதி ட்ரீம் 11 இல் நடந்த கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து- பாகிஸ்தான் அணிக்கு இடையேயான விளையாட்டில் தனது கிரிக்கெட் அறிவையும், திறமையும் பயன்படுத்தி ஒரு சிறந்த அணியை உருவாக்கினார்.
அந்த அணியில் J. Duffyயை கேப்டனாகவும், H. Rauf ஐ வைஸ் கேப்டன் ஆகவும் தேர்ந்தெடுத்து மொத்தம் 1138 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். இந்த வெற்றியைத் தொடர்ந்து மிகச்சிறிய கிராமமான கோதிக்கலானில் வசிக்கும் ஜகன்நாத்தின் வீட்டுக்கு கிராம மக்கள் திரண்டு வந்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
மேலும் இதுகுறித்து ஜகன்நாத் கூறியதாவது, ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்த எனக்கு இந்த வெற்றி மிகப்பெரியது. இதுவரை ரூபாய் 7 லட்சம் பணம் வங்கியில் இருந்து கிடைத்துள்ளது. விரைவில் மீதமுள்ள தொகையும் வரும். இந்த பணத்தின் மூலம் தங்களுக்கென சொந்தமாகவும், மிகப்பெரியதாகவும் நிரந்தரமாகவும் வீடு கட்டப் போகிறோம்.
மேலும் தனது தந்தையின் சிகிச்சைக்கும், விவசாயத்திற்காக ஒரு டிராக்டர் வாங்குவோம் என தெரிவித்தார். ஒரு சிறிய குடும்பத்தில் பிறந்த எனக்கே இந்த அளவு வாய்ப்பு வந்திருக்கிறது என்றால் மற்றவர்களும் முயற்சி செய்யலாம் எனவும் கூறியுள்ளார். தற்போது அவரது வெற்றியை தொடர்ந்து பலரும் ட்ரீம் 11 விளையாட்டில் ஆர்வமாக ஈடுபட்டு வருகின்றனர்.