வாகன ஓட்டிகள் அதிர்ச்சி... மே 1 முதல் GPS மூலம் சுங்க கட்டணம்?
Dinamaalai April 19, 2025 01:48 AM

இந்தியா முழுவதும் மே 1ம் தேதி முதல் GPS மூலம் சுங்கக் கட்டணம்  வசூலிக்கப்படும் என சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன. இது குறித்து  மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

அதன்படி மே 1 முதல் நாடு தழுவிய செயற்கைக்கோள் அடிப்படையிலான சுங்கக் கட்டண வசூல் நடைமுறை குறித்து வரும் தகவல் உண்மை அல்ல.


செயற்கைக்கோள் அடிப்படையிலான சுங்கக் கட்டண வசூல் குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகமும், நெடுஞ்சாலை ஆணையமும் எந்த முடிவும் எடுக்கவில்லை என மத்திய அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.