நடுரோட்டில் ஹெல்மெட் அணிந்த ஸ்கூட்டர் ஓட்டுநரை செருப்பால் தாக்கிய நபர்… தீவிர விசாரணையில் போலீஸ்…. பரபரப்பு சம்பவம்…!!!
SeithiSolai Tamil April 18, 2025 11:48 PM

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டா நகரத்தில் உள்ள செக்டர்-121 பகுதியில் நடந்த சம்பவம் ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கருப்பு உடையில் இருந்த ஒரு நபர், போக்குவரத்து அதிகம் உள்ள சாலையின் நடுவே, ஹெல்மெட் அணிந்த ஒரு ஸ்கூட்டர் ஓட்டுநரை வெறித்தனமாக செருப்பால் அடிக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

இந்த வீடியோ 26 வினாடிகள் நீளமுடையதாகவும், இரவு நேரத்தில் எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை பொதுமக்கள் தூரத்திலிருந்து படம் பிடித்து சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளனர். காணொளி வெளியாகியதும் நொய்டா போலீசார் சம்பவம் குறித்து விசாரணையை தொடங்கி, சம்பந்தப்பட்ட நபரை அடையாளம் காண முயற்சி செய்து வருகின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.