பாலிவுட் திரையுலகில் மூத்த நடிகர் மனோஜ் குமார். இவர் திரைப்பட இயக்குநருமாவார். இவர் வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். இவருக்கு வயது 87. ஏப்ரல் 4ம் தேதி வெள்ளிக்கிழமை இன்று காலை கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் அதிகாலை 4.03 மணிக்கு காலமானார்.
அவரது உடல் வெள்ளிக்கிழமை பிற்பகல் முதல் அவரது ஜூஹு இல்லத்தில் வைக்கப்படும், அவரது இறுதி ஊர்வலம் சனிக்கிழமை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ அறிக்கைகளின்படி, அவருக்கு கடுமையான மாரடைப்பு ஏற்பட்டதனால் உயிர் பிரிந்துள்ளது.
நடிகர் மனோஜ் கடந்த சில மாதங்களாக சிதைந்த கல்லீரல் சிரோசிஸால் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் அவரது உடல்நிலை மோசமடைந்து வந்ததாகவும் அறிக்கைகள் உறுதிப்படுத்தியுள்ளன.
பல தேசபக்தி படங்களில் நடித்து பிரபலமானவர் மனோஜ். ஷாஹீத், உப்கார் மற்றும் ரங் தே பசந்தி போன்ற படங்களில் நடித்ததற்காக பிரபலமானார். இந்திய சினிமாவிற்கு அவர் செய்த பங்களிப்புகள் அவருக்கு தேசிய திரைப்பட விருது மற்றும் ஏழு பிலிம்பேர் விருதுகள் உட்பட பல மதிப்புமிக்க பாராட்டுகளைப் பெற்றுத் தந்தன. கலைகளுக்கு அவர் ஆற்றிய மகத்தான பங்களிப்பைப் பாராட்டி, இந்திய அரசு 1992ல் அவருக்கு பத்மஸ்ரீ விருதை வழங்கியது. 2015 ம் ஆண்டில் இந்திய சினிமாவின் மிக உயர்ந்த அங்கீகாரமான தாதாசாகேப் பால்கே விருதையும் பெற்றுள்ளார்.