காசா பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் ஒன்றில், புகழ்பெற்ற அபூ சம்ரா குடும்பத்தினர், தங்களது உறவினரை சுட்டுக்கொன்ற ஹமாஸ் உறுப்பினரை பொதுநாளில் நேரடியாக சுட்டுக்கொன்றுள்ளனர். டெயிர் அல் பாலாஹ் பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் வீடியோவில், குறித்த ஹமாஸ் உறுப்பினர் சுவற்றை நோக்கி மண்டியிட்டு நின்றபோது சுடப்பட்டது பார்க்கப்படுகிறது. ஹமாஸ் இந்தச் செயலைக் கண்டித்து, “எவரும் சட்டத்தைக் கைப்பற்ற அனுமதிக்கப்பட மாட்டார்கள்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. காசா பகுதியில் பல சக்திவாய்ந்த குடும்பங்கள் ஹமாஸ் கட்டுப்பாட்டை மீறி இயங்குவதால், இது போன்ற மோதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இது போன்ற குடும்பங்களுக்கும் ஹமாசுக்கும் இடையில் மோதல்கள் தொடர்ந்து பல வரலாறுகளாக நடந்து வருகிறது. தற்போது ஹமாஸ் மீது மக்கள் கோபம் அதிகரித்துள்ள நிலையில் காசா முழுவதும் போராட்டங்கள் வெடித்து வருகின்றன. மேலும் ஹமாஸ் மற்றும் பிற அமைப்புகள், போராட்டங்களில் ஈடுபடுபவர்கள் இஸ்ரேலின் கூட்டாளிகளாக கருதப்படுவார்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளது.