சமூக ஊடகங்களில் சமீபத்தில் ஒரு சிறுமியை கழுகு ஒன்று தூக்கிச் செல்ல முயற்சிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. அதாவது இந்த வீடியோவில் சக்தி வாய்ந்த மிகப்பெரிய பைலட் கழுகு ஒன்று வேகமாக பறந்து வந்து தரையில் நின்று கொண்டிருந்த சிறுமியை தூக்கிச் செல்ல அருகில் வரும்போது சட்டென அருகில் இருந்த மற்றொரு நபர் அந்த சிறுமியை தூக்கிக்கொண்டு வேகமாக நடந்து செல்கிறார்.
இதனால் கழுகு பறந்து சென்று விட்டது. இந்தத் திகிலூட்டும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பல லட்சக்கணக்கான பார்வையாளர்களை கடந்து வருகிறது. இச்சம்பவம் குறித்து சிலர் இது ஈரானில் நடந்த உண்மையான சம்பவம் என தெரிவித்து வருகின்றனர். ஆனால் சிலர் இது AI யால் உருவாக்கப்பட்ட பட காட்சிகள் என சந்தேகத்தை எழுப்பி வருகின்றனர். இந்த வீடியோ உண்மைதானா? என்பது தெரியவில்லை. ஆனால் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.