நிலக்கரி சுரங்கத்தில் பயங்கர வெடி விபத்து…. 5 பேர் துடிதுடித்து பலி; 4 பேர் படுகாயம்…. பரபரப்பு சம்பவம்….!!
SeithiSolai Tamil April 01, 2025 05:48 AM

ஸ்பெயின் நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள டெகானா நகரில், செர்ரெடோ எனப்படும் நிலக்கரி சுரங்கத்தில் வெடிவிபத்து ஏற்பட்டதில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 4 காயமடைந்தனர். இந்த சம்பவத்துக்குப் பிறகு, தீயணைப்பு துறையினர், சுரங்க மீட்பு குழுவினர் மற்றும் போலீசார் விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் இருவர் மட்டும் பாதிப்பின்றி உயிர் தப்பியதாக அஸ்தூரியாஸ் அவசர சேவைத் துறை தகவல் வெளியிட்டுள்ளது.

சம்பவம் குறித்து ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சாஞ்செஸ், தனது சமூக வலைதளமான X-இல் பதிவிட்டதாவது, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்ததுடன், காயமடைந்தவர்கள் விரைவில் நலமடையப் பிரார்த்திப்பதாகவும், மீட்பு பணியில் ஈடுபட்ட அவசர சேவை ஊழியர்களுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார். இந்த சுரங்க விபத்து, ஸ்பெயினில் பெரும் வருத்தத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.