நெஞ்சை உறைய வைக்கும் காட்சிகள்... மியான்மரில் ரயில் நிலையம், கட்டிடங்களை மிரள வைத்த நிலநடுக்கம்.!
Dinamaalai March 29, 2025 08:48 PM

 
 மியான்மரில் 7.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் அந்நாடு மிகக்கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது. மியான்மர் மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கங்களின் கோர காட்சிகள் வெளியாகி மனதைப் பதற வைக்கின்றன. இந்த நிலநடுக்கத்தால் 5 நகரங்களில் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.

இந்த இடிபாடுகளில் சிக்கி இதுவரை 100 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 200-க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பெரிய பெரிய கட்டடங்கள் தரைமட்டமானதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

மேல் மியான்மரில் உள்ள சாகிங், மண்டலே, கியூக்சே, பைன் ஓ ல்வின் மற்றும் ஷ்வெபோ பல நகரங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இப்பொது, நிலநடுக்கங்கள் காரணமாக அங்குள்ள கட்டடங்கள் நொறுங்கி விழும் கோரக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. சதுசாக் பகுதியில் புதியதாக கட்டப்பட்டு வந்த 34 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில், குறைந்தது வேலை செய்து கொண்டிருந்த கட்டுமானத் தொழிலாளர்கள் 43 பேர் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது . அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அதே போல் யாங்கோன்-மண்டலே விரைவுச்சாலையில் ஒரு ரயில்வே பாலம் மற்றும் ஒரு சாலை பாலம் இடிந்து விழுந்ததாக மியான்மரின் அரசு ஊடகங்களை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்திற்குப் பிறகு, முக்கிய நகர சாலை ஒன்றில் மிகப்பெரிய விரிசல் ஏற்பட்டுள்ளது.

மத்திய மியான்மரைத் தாக்கிய நிலநடுக்கத்தால் மண்டலே பகுதி விமான நிலையம் பயங்கர சேதமடைந்துள்ளது. தாய்லாந்தின் தலைநரகம் பாங்காக்கில் இருக்கும் மெட்ரோ ரயில் ஒன்று ஊஞ்சல் ஆடுவது போல குலுங்கும் பயங்கர காட்சி வெளியாகியுள்ளது. 

தாய்லாந்தின் தலைநகரான பாங்காக்கில், ஒரு கட்டிடத்தின் மொட்டை மாடியில் இருந்த (ஸ்விம்மிங் புல்) குளத்திலிருந்து தண்ணீர் வெளியேறியது, அதே நேரத்தில், அதில் குளித்து கொண்டிருந்தவர்களும் கீழே விழுந்தாக தெரிகிறது.

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.