துருக்கி நாட்டில் சமீபத்தில் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர் கைது செய்யப்பட்டார். இதனை எதிர்த்து நாடு முழுவதும் மக்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், அண்டாலியா நகரத்தில் போராட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட ஒரு நபர் பிரபல போக்கிமான் கார்ட்டூனில் வரும் “பிக்காச்சூ” கதாபாத்திரத்தின் வேடமணிந்து வந்தார். அப்போது அவரை கண்ட பொதுமக்கள் அவரிடம் சென்று புகைப்படங்களை எடுத்துக்கொண்டனர். அதோடு பிக்காசோ உடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை போராட்டக்காரர்கள் இணையத்தில் பதிவிட்டனர்.
இதை தொடர்ந்து திடீரென தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில் போராட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக காவல்துறையினர் தடியடி நடத்தினர். இதனால் அங்கிருந்த போராட்டக்காரர்கள் அனைவரும் தப்பி ஓடிய போது அவர்களுடன் சேர்ந்து பிக்காச்சூவும் ஓடியது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். மேலும் இந்த போராட்டத்தின் போது பிக்காச்சூ கதாபாத்திரம் மிகவும் கவனிக்கத்தக்க ஒன்றாக மாறியுள்ளது.