தமிழகம் முழுவதும் சமீப காலங்களாக கஞ்சா மற்றும் போதைப் பொருட்களின் புழக்கம் அதிகரித்து வருகிறது.
பெரும்பாலான குற்ற வழக்குகளில் ஈடுபடும் இளைஞர்கள் கஞ்சா மற்றும் போதைப் பொருளுக்கு அடிமையாகி இருப்பதும் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் கடலூர் மாவட்டம், திருப்பாதிரிப்புலியூரில் 23 கிலோ கஞ்சாவை விற்பனை செய்ய முயன்ற 10 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டது.
ஆந்திராவில் இருந்து கஞ்சா வாங்கி வந்து விற்க முயன்ற 10 பேரை போலீசார் கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர் .