சீனாவை சேர்ந்த பெண் ஒருவர் சொந்த வீடு வாங்கும் கனவில் கழிவறையிலே வசித்து வரும் சம்பவம் இணையத்தில் வைரலாகி ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. அதாவது சீனாவில் யாங் என்ற பெண் வசித்து வருகிறார். இந்தப் பெண்ணிற்கு 18 வயது ஆகிறது. சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற கனவை கொண்ட அவர் செலவுகளை கட்டுப்படுத்தி பணத்தை சேமித்து வருகிறார். அதற்காக தன் வேலை பார்க்கும் நிறுவனத்தில் உள்ள கழிப்பறையில் வாடகைக்கு வசித்து வருகிறார்.
குடியிருப்பு பகுதிகளில் வாடகைக்கு குடியிருந்தால் செலவு அதிகமாகும் என்பதை கருத்தில் கொண்ட அவர் நிறுவனத்தில் உள்ள கழிப்பறையில் ரூ. 545 மட்டுமே செலுத்தி வசித்து வருகிறார். அந்த சிறிய அறையில் தான் சமைப்பது, துணிகளை துவைப்பது, குளிப்பது,தூங்குவது என அனைத்து வேலைகளையும் செய்து வரும் அவர் ரூ.2290 வாடகையாக தன் முதலாளியிடம் கொடுத்தபோது அதற்கு மறுப்பு தெரிவித்த முதலாளி தண்ணீர் மற்றும் மின்சார செலவுகளுக்கு மட்டுமே அவரிடம் தொகையை கேட்டுள்ளார்.
இதில் குறிப்பாக பணி நேரங்களில் அலுவலகத்தின் பணியாளர்கள் கழிவறையை பயன்படுத்த வேண்டும் என்பதால் அந்த பெண் தனது உடைமைகளை வேறொரு இடத்திற்கு பகல் நேரத்தில் மாற்றி வைத்துக் கொள்கிறார். இந்தப் பெண்மணி ரூ. 34,570 மாத சம்பளமாக வாங்கும் பட்சத்தில் ரூ. 4500ல் தனது செலவுகளை பார்த்துக் கொண்டு மீதி பணத்தை சேமித்து கடும் சிக்கனத்துடன் வீடு வாங்கும் கனவை நோக்கி வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.