மத சடங்கின் போது கருசிதைவு…. இளம்பெண் தொடர்ந்த வழக்கு…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!
SeithiSolai Tamil April 01, 2025 03:48 AM

தைவானில் பட்டாசுகள் வெடிப்பதால் தீய சக்திகள் வெளியேறி நன்மை நடக்கும் என மக்கள் நம்புகின்றனர். கர்ப்பமாக இருந்த கியூ என்ற பெண்ணை ஆசீர்வாதம் அளிக்கும் சடங்குக்கு நிர்வாகிகள் அழைத்துள்ளனர். இதனால் அவரது கரு கலைந்தது. இந்த நிலையில் மத சடங்கு செய்வதாக கூறி கருசிதைவு ஏற்படுத்தி துன்பத்திற்கு உள்ளாக்கிய ஆலய நிர்வாகிகள் மீது க்யூ வழக்கு தொடர்ந்தார்.

தனது கரு கலைந்தது மட்டுமில்லாமல் உடலில் தீக்காயங்கள் ஏற்பட்டதால் அந்த பெண் வேலையையும் இழந்தார். இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் க்யூவுக்கு 25.6 லட்சம் பணத்தை இழப்பீடாக வழங்க உத்தரவு பிறப்பித்தது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.