Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் அதிரடி எபிசோட் குறித்த ஆச்சரிய தொகுப்புகள்.
விஜயா ரோகிணி குறித்து தெரிந்து கொண்ட பின் கோபத்தில் அவரை சரமாரியாக அடித்துக் கொண்டிருக்கிறார். பின்னர் கடுப்பாகி அவரை வீட்டை விட்டு வெளியில் போக சொல்லுகிறார். ரோகிணி தான் பேசுவதை கொஞ்சம் கேளுங்கள் ஆன்ட்டி எனக் கூறுகிறார்.
இன்னும் நீ பேசுவதை எதுக்கு கேட்கணும். வாயை திறந்தாலே பொய் தானே சொல்ற என்கிறார். ரோகிணி மனோஜிடம் பேச போக அதையும் தடுத்துவிடுகிறார் விஜயா. பின்னர் ரோகிணியை வீட்டை விட்டு வெளியில் போ என்கிறார். அவர் முடியாது என மறுக்கிறார்.
ரோகிணியின் கழுத்தை பிடித்து வெளியில் அனுப்பி விட்டு கதவை அடைத்துவிடுகிறார். ரோகிணி நேராக வித்யா வீட்டுக்கு வருகிறார். அவர் என்ன இப்படி வந்திருக்க எனக் கேட்க வீட்டில் அந்த கல்யாணத்துக்கு போய் இருந்தோமோ என்கிறார். அந்த கல்யாணம் பிரவுன் மணி வீட்டு கல்யாணம் என்கிறார்.
siragadikka aasai
உடனே வித்யா தனக்கும் அவர் பத்திரிக்கை வைத்ததை காட்ட இதை அப்போவே சொல்லி இருக்கலாமே என்கிறார். சொன்னாலும் நீ போகாம இருந்து இருப்ப ஆனா மத்தவங்க போய் இருப்பாங்களே என்கிறார். வித்யாவும் பல நாள் திருடன் ஒருநாள் மாட்டுவான். நீ சொன்ன பொய் இப்போ வெளிச்சம் ஆகிட்டு என்கிறார்.
ஆனால் ரோகிணி இதுவும் நல்லதுக்கு தான். இப்போ அவங்க மேல தப்பு இருக்கு தானே. என் மாமனார் பத்தி தெரியும். அவர் என்னை வீட்டுக்கு அழைக்க எதுவும் செய்வார் என்கிறார். நான் அங்க போயிட்டா எப்படியாவது மனோஜை என் பக்கம் இழுத்துடுவேன் எனவும் கூறுகிறார்.
இனிமே மீனாவை விட என்னை கேவலமா நடத்துவாங்க. அதெல்லாம் தெரியும். ஆனா நானா தேடி வச்சிக்கிட்ட வாழ்க்கை என்னால் அப்படியே போயிட முடியாது. என் வாழ்க்கையை நான் காப்பாத்திடுவேன். இனிமே அழுக போறது இல்லை என வாய் பேசுகிறார்.
வீட்டில் மனோஜை அண்ணாமலை போய் அழைத்து வரச் சொல்ல அவர் விஜயாவின் பேச்சை கேட்டு உள்ளே சென்று விடுகிறார். முத்து மற்றும் மீனா இது என்ன இப்படி போயிட்டு எனப் பேசிக்கொண்டு இருக்கின்றனர். மீனா, நீங்களா இருந்தா குடிச்சி இருப்பீங்க. அவரா இருக்கதால உள்ளே இருக்காரு என்ப் பேசிக்கொண்டு இருக்கிறார்.