தமிழில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற படத்தில் மூலமாக ஹீரோயினாக நடித்தவர்தான் ரித்து வர்மா. இந்த படத்திற்கு பிறகு அவருக்கு தமிழில் நல்ல வரவேற்பு கிடைத்தது. நித்தம் ஒருவானம், மார்க் ஆண்டனி போற்ற படங்களிலும் நடித்து கவனம் பெற்றார். விக்ரமுடன் நடித்த துருவ நட்சத்திரம் ஆனது விரைவில் வெளியாகவுள்ளது. மேலும் தெலுங்கு படங்களிலும் அதிகமாக நடித்து வருகிறார் . இந்த நிலையில் ரித்து வர்மா குறித்து காதல் கிசுகிசு பரவி வருகிறது. அதாவது அவர் தெலுங்கு நடிகர் வைஷ்ணவ் தேஜ் உடன் காதலில் இருப்பதாக தகவல் பரவி வருகிறது.
இவர் யார் என்றால் நடிகர் சிரஞ்சீவியின் சகோதரி மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இவரும் ரித்து வர்மாவும் இணைந்து எந்த படத்தில் இதுவரை நடித்ததில்லை. ஆனால் நண்பர்களாக இருந்தவர்கள் சந்தித்து நண்பர்களாகி பின்பு இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது .மேலும் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்களாம். நடிகர் வைஷ்ணவ் விட ரித்து வர்மா ஐந்து வயது மூத்தவர்.