இந்தியா முழுவதும் நாளை தென் மாநிலங்களில் எல்பிஜி கேஸ் டேங்கர் லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக அறிவித்துள்ளது. அதாவது எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள புதிய கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
அதன்படி நாளை தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற இருந்து வருகிறது.
இந்த தகவலை தென் மண்டல எல்பிஜி கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சுந்தரராஜன் தெரிவித்துள்ளார். நாளை வேலை நிறுத்த போராட்டம் நடைபெற இருப்பதால் நாளை கேஸ் சிலிண்டர் கிடைப்பதில் பெரும் தட்டுப்பாடு ஏற்படலாம் எனக் கூறப்படுகிறது.