18வது ஐபிஎல் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் , கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. கிரிக்கெட் போட்டிகளில் அனைவரும் விரும்பும் போட்டியாக ஐபில் உள்ளது. 20 ஓவர் போட்டியாக நடத்தப்படும் இந்த போட்டியின் இந்திய வீரர்கள் மற்றும் வெளிநாட்டு வீரர்கள் கலந்து கொண்டு விளையாடுகிறார்கள். சென்னை, மும்பை , டெல்லி, பெங்களூர், கொல்கத்தா, ஹைதராபாத் உள்ளிட்ட பல நகரங்களிலும் போட்டி நடைபெறுகிறது. முதல் போட்டியில் கொல்கத்தா மற்றும் பெங்களூர் அணிகள் மோத இருக்கின்றன.
நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடுகிறது. தோனிக்கு இதுவே கடைசி ஐபிஎல் தொடராக இருக்கும் என்று நினைக்கும் நிலையில் ஐபிஎல் கோப்பையோடு தோனியை வழி அனுப்ப சென்னை அணியானது தீவிரமுனைப்பில் உள்ளது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த SKY-இடம் சிஎஸ்கேவின் UNCAPPED PLAYER தோனியை சமாளிக்க என்ன பிளான் வைத்துள்ளீர்கள் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர் ஐயையோ அவரா இத்தனை ஆண்டுகளில் அவரை யாராவது சமாளிக்க முடிந்ததா? என்று சிரித்துக்கொண்டே பதில் அளித்துள்ளார்.