பீகார் மாநிலத்தில் பெற்றோருடன் வசித்து வரும்மாணவி குஷ்பூ. இவரை நேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் குஷ்பூவை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். அதாவது அந்த மாணவியின் சகோதரர்களை அவரது பெற்றோர் பள்ளி மேல்நிலை வகுப்புகளில் அறிவியல் பிரிவில் சேர்த்திருந்தனர். ஆனால் குஷ்பூவை அவருக்கு விருப்பமில்லாத 11ம் வகுப்பில் கலை பிரிவில் சேர்த்துள்ளனர்.
இதுகுறித்து குஷ்பு 10 ம் வகுப்பில் 500க்கு குறைந்தபட்சம் 400 மதிப்பெண் எடுக்க வேண்டும் என பெற்றோர் எதிர்பார்த்தனர். நான் 399 மதிப்பெண் தான் எடுத்தேன். ஒரு மதிப்பெண் குறைந்ததால் என்னை 11ம் வகுப்பில் அறிவியல் பிரிவு சேர்க்க பெற்றோர் மறுப்பு தெரிவித்துவிட்டனர். எனது சகோதரர்களை அறிவியல் பிரிவில் படிக்க அனுமதித்த நிலையில் எனக்கு மட்டும் பெற்றோர் பாரபட்சம் காட்டுகின்றனர் என கவலை தெரிவித்திருந்தார்.
இதனை அறிந்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் குஷ்பூவை 11ம் வகுப்பில் அறிவியல் பிரிவில் சேர்க்க ஏற்பாடு செய்ய உறுதி அளித்தார். இது குறித்து அவர், உனது விருப்பப்படி மேல்நிலை வகுப்பு அறிவியல் பிரிவில் சேர்ந்து படிப்பதை பிரதமர் மோடியும், மாநில முதல்வர் நிதிஷ்குமாரும் உறுதி செய்வார்கள். ஏற்கனவே இந்த விவகாரம் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் பேசி விட்டேன். மருத்துவராகும் உனது கனவை நினைவாக்க தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வுக்கான பயிற்சியை தொடங்கும்படி வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். இதனையடுத்து மாணவி உற்சாகத்தில் உள்ளார்.