கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் கோகுல் நகர் பகுதியில் அருகே குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் மணி. தள்ளுவண்டி வியாபாரியான இவருடைய மனைவி காளியம்மாள். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில், நேற்று மணி தனது மனைவியுடன் வழக்கம்போல் வியாபாரத்திற்கு சென்றுள்ளார். இரண்டு மகன்களும் வெளியே சென்று விட்டனர். இந்த சமயத்தில் மணி வீட்டில் மதியம் திடீரென தீப்பிடித்து புகை வந்தது.
இதைபார்த்த அக்கம், பக்கத்தினர் மணிக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர் விரைந்து வந்து வீட்டில் தீப்பிடித்து எரிவதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில், வீட்டில் இருந்த பிரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்ட வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து கருகி சேதமடைந்தன. விசாரணையில் வீட்டில் சாமிக்கு ஏற்றி வைத்து இருந்த விளக்கு காற்றடித்து கீழே விழுந்து தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இது குறித்து ஓசூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.