Breaking: பரந்தூர் விமான நிலையம்… பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்பு…!!!
SeithiSolai Tamil March 14, 2025 07:48 PM

தமிழக சட்டசபையில் 2025 ஆம் ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்துள்ள நிலையில் நிதி ஒதுக்கீடு குறித்து அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கான பணிகள் விரிவுபடுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக பரந்தூரில் விமான நிலையம் அமைக்க கூடாது என்று அங்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் போராட்டங்களும் நடைபெறுகிறது. மேலும் இந்த நிலையில் பட்ஜெட்டில் பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் பணிகள் துரிதப்படுத்தப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார் .

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.