மர்மத்தீவு ஒன்றில் மரணத்தை தடுக்கும் ஊசி போடப்படுவதாகவும் அதனை உலகின் பணக்காரர்கள் வந்து செலுத்தி கொள்வதாகவும் இணையத்தில் தகவல்கள் பரவி வருகின்றன.
மரணம் என்பது இயற்கையான ஒன்று என்பதை யாராலும் மறுக்க முடியாது. ஆனால் இந்த மரணத்தையே தடுக்கும் விதமாக ஊசி செலுத்தப்படுகிறது என்று சில தகவல்கள் பரவி வருகின்றன. அதிலும் குறிப்பாக பணக்காரர்கள் தங்களது உயிரை பாதுகாத்துக் கொள்ள இவ்வாறு செய்வதாக கூறப்படுகிறது.
டெய்லி மெயில் அறிக்கையின்படி, `அமெரிக்காவின் ஹோண்டுராஸ் பகுதியில் இருந்து சுமார் 40 மைல் தொலைவில் அமைந்துள்ள ரோட்டன் என்ற தீவில் தான் இவ்வாறு ஊசி செலுத்துவதாக கூறப்பட்டுள்ளது. இங்கு அமெரிக்க விசா இருந்தாலே போதும் நேரடி விமான மூலம் இந்த தீவுக்குச் செல்ல முடியும்.
இந்த தீவை பிரிக்மேன் என்பவர் உருவாக்கியதாக கூறப்படுகிறது. இந்த தீவில் பண பரிமாற்றம் முழுவதும் பிட்காயின் முறைப்படி நடக்கின்றன. அதுமட்டுமில்லாமல் இந்த தீவில் சட்ட விரோதமாக மருத்துவ சேவைகள் வழங்கப்படுகிறது. குறிப்பாக மரணத்தை தவிர்த்து, வயதை குறைக்கும் ஊசிகள் இங்கு செலுத்தப்படுவதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளிவந்துள்ளன.
நமது உடலில் டிஎன்ஏ மூலக்கூறுகளை மாற்றக்கூடிய அல்லது மாற்று டிஎன்ஏ மூலக்கூறுகளை கொண்ட மருந்து ஊசி மூலமாக செலுத்தப்படுவதாக கூறப்படுகிறது. இதன்மூலம் மரணத்தை தள்ளி போடலாம் என்று எந்த ஒரு மருத்துவ ஆய்வின்படி உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கூறப்படுகிறது. இந்த சிகிச்சை அமெரிக்காவில் சட்டவிரோதமாகவே உள்ளது.
மேலும், இத்தைகைய நிரூபிக்கப்படாத மருந்துகள் உடலில் ஏற்படுத்தும் சாதக பாதகங்கள் குறித்து உறுதியான தகவல் இல்லை என்பதால், உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் (FDA) இந்த சிகிச்சை அங்கீகரிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Vikatan WhatsApp Channelஇணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK