தமிழக பட்ஜெட் 2025: வஞ்சித்த ஒன்றிய அரசு?? தமிழக அரசின் வருவாய், செலவின மதிப்பு எவ்வளவு?
WEBDUNIA TAMIL March 14, 2025 08:48 PM

தமிழக சட்டமன்றத்தில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தமிழக அரசின் வருவாய், செலவினங்கள் குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு உரையில் கூறியுள்ளார்.

அதன்படி, 2025-26ம் நிதியாண்டிற்கான வரி வருவாய் ரூ.2.20 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. 2025-26 நிதியாண்டில் மாநிலத்தில் சொந்த வருவாய் 14.6 சதவீதம் வளர்ச்சி பெறும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அரசின் முயற்சியால் மாநிலத்தின் சொந்த வருவாய் உயர்ந்துள்ளது. 2024-25ம் நிதியாண்டில் வரவு, செலவு திட்ட மதிப்பீட்டில் மாநிலத்தின் சொந்த வருவாய் ரூ.1,95,173 கோடி.

கடந்த ஆண்டுகளில் மத்திய அரசின் பங்கு வரி வருவாய் குறைந்துக் கொண்டே வருகிறது. தமிழ்நாட்டின் பேரிடர் காலங்களில் மத்திய அரசு தேவையான நிதியை ஒதுக்காததால் மாநில அரசு தனது நிதியிலிருந்து பணிகளை செய்ததால் நிதி நிலைமை பாதிக்கப்பட்டது.

இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 6 சதவீதம் உள்ள தமிழகம் மத்திய அரசுக்கு 9 சதவீதம் வரியை அளித்து வருகிறது. ஆனால் மத்திய அரசியம் இருந்து 4 சதவீத வரிப்பகிர்வு மட்டுமே திரும்ப கிடைக்கிறது.

மத்திய அரசிடம் இருந்து கிடைக்கும் வருவாய் பங்கு 1.96 சதவீதமாக குறைந்துள்ளது.

வரும் நிதியாண்டில் மாநில வரி வருவாய் 2.20 லட்சம் கோடியாக இருக்கும். வரி அல்லாத வருவாய் ரூ.28,219 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.