Budget 2025-26: மகளிர் உரிமைத் தொகை டு பெண்கள் விடுதி வரை! - மகளிருக்கு என்னென்ன அறிவிப்புகள்?
Vikatan March 14, 2025 07:48 PM

தமிழ்நாட்டின் 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் காலை 9:30 மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். இந்த பட்ஜெட்டில் மகளிருக்கு என்னென்ன முக்கிய அறிவிப்புகள் வெளியாகி இருக்கிறது என்பதைப் பார்ப்போம்.

தங்கம் தென்னரசு - ஸ்டாலின் மகளிருக்கு என்னென்ன அறிவிப்புகள்?

* மகளிர் விடியல் பயணத் திட்டத்திற்காக 3600 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

* மகளிர் சுயஉதவிக்குழுக்களைப் பொறுத்தவரை 10,000 சுயஉதவிக் குழுக்கள் உருவாக்கப்படும் என்றும் அதற்காக 37,000 கோடி வழங்கிட உள்ளதாகவும் கூறப்பட்டிருக்கிறது.

* மேலும் 10 இடங்களில் பணிபுரியும் 800 பெண்கள் பயனடையும் வகையில் தோழி விடுதிகள் அமைக்கப்படும் என்றும் அதற்காக 77 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

* அதேபோல சென்னை, கோவை, மதுரையில் தலா 1000 மாணவிகள் பயன்பெறும் வகையில் மாணவியர் விடுதி 275 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது.

* மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு 13, 807 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் புதியவர்கள் விண்ணப்பிக்க உரிய வாய்ப்பு விரைவில் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.