தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சி பொறுப்பை ஏற்று நான்கு வருடங்கள் ஆகும் நிலையில் இன்று 2025 ஆம் ஆண்டுக்கான கடைசி பட்ஜெட்டை தாக்கல் செய்கிறது.இந்த பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்துள்ள நிலையில் பல்வேறு துறைகளுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு முக்கிய அறிவிப்புகள் வெளியாகிறது.
அந்த வகையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரத்தில் புதிதாக விமான நிலையம் அமைக்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டில் அறிவித்துள்ளார். அதன்பிறகு 10 லட்சம் சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ.2.5 லட்சம் கோடி வரை கடன் வழங்கப்படும். மேலும் கலைஞர் கைவினை திட்டத்தில் 19 ஆயிரம் கைவினை கலைஞர்கள் பயன்பெறும் வகையில் 74 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.