மார்ச் 17 முதல் ஏப்ரல் 30ம் தேதி வரை சட்டசபை கூட்டத்தொடர்... சபாநாயகர் அப்பாவு !
Dinamaalai March 14, 2025 09:48 PM

 
தமிழகத்தில் இன்று மார்ச் 14ம் தேதி வெள்ளிக்கிழமை பொதுபட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்து உரை நிகழ்த்தியுள்ளார். 

`

சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்கள் சந்திப்பில் ” எல்லா தரப்பு மக்களும் ஏற்றுக்கொள்கின்ற வண்ணம் ஒரு நிதிநிலை அறிக்கையை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்துள்ளார்.நாளை வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. அன்றைய தினத்தை தவிர அனைத்து நாட்களிலும் கேள்வி நேரம் நடைபெறும்.  

திங்கட்கிழமை முதல் 5 நாட்களுக்கு பட்ஜெட் மீதான பொதுவிவாதமும், பதிலுரையும் நடைபெறும்.அதன் தொடர்ச்சியாக மார்ச் 24ம் தேதி முதல் அடுத்த மாதம் ஏப்ரல் 30-ம் தேதி வரை 24 நாட்கள் சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறும். அப்போது மானிய கோரிக்கையின் மீது விவாதமும், வாக்கெடுப்பும் நடைபெறும்” என தெரிவித்துள்ளார்.

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.