சிஎஸ்கே கிரிக்கெட் அணியின் ரசிகர்களுக்கு குட் நியூஸ். 2025 ஐபிஎல் சீசன் இப்போதே களைக்கட்ட த் தொடங்கி இருக்கிறது. இந்த ஐபிஎல் தொடரில் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டிகளை காண வரும் ரசிகர்கள், போட்டியின் டிக்கெட்டை காண்பித்து சென்னையில் மாநகரப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என CSK அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த இலவச பயணம் அன்றைய தினத்தின் போட்டி தொடங்குவதற்கு 3 மணி நேரத்துக்குள்ளாக மட்டுமே செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் போட்டியை நேரில் காண வரும் ரசிகர்களின் வசதிக்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த முறை இதைப் போலவே மெட்ரோ ரயிலிலும் டிக்கெட்டைக் காண்பித்து இலவச பயணம் மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் எதிர்ப்பார்த்து காத்திருக்கும் 18வது சீசன் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் வருகிற மார்ச் மாதம் 21ம் தேதி தொடங்கவுள்ளது. இந்த சீசனிலும் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கவுள்ளன. இந்த சீசனுக்கான மெகா ஏலம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்றது. இதில் 62 வெளிநாட்டவர் உள்பட 182 வீரர்கள் ரூ.639.15 கோடிக்கு வாங்கப்பட்டனர். இதனையடுத்து ஐபிஎல் அணிகள் தங்களது வீரர்களை தயார்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் 2025 ஐபிஎல் தொடரில் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டிகளை காணவரும் ரசிகர்கள் போட்டியின் டிக்கெட்டை காண்பித்து மாநகரப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என CSK நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது போட்டி தொடங்குவதற்கு 3 மணி நேரத்துக்குள்ளாக மட்டுமே செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.