செம... வாட்ஸ்ஆப்பில் 'கிரியேட் ஈவென்ட்' புதிய வசதி!
Dinamaalai March 15, 2025 03:48 PM

 
தகவல் பரிமாற்ற செயலிகளில் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருவது வாட்ஸ்ஆப் தான். வாட்ஸ் அப்பில் பயனர்களின் வசதி மற்றும் தேவைகளுக்கு ஏற்றவாறு அவ்வப்போது புதிய அம்சங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. 

அந்தவகையில், வாட்ஸ்ஆப்பில் மேலும் ஒரு புதிய அம்சம் அறிமுகமாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.  வாட்ஸ்ஆப்பில் குரூப் சாட்களில் நிகழ்வுகளை நினைவூட்டுவதற்கு 'கிரியேட் ஈவென்ட்' என்ற வசதி ஏற்கனவே இருந்து வருகிறது.

இந்நிலையில் தனிப்பட்ட சாட்களிலும் 'கிரியேட் ஈவென்ட்' வசதி வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. சோதனையில் இருந்த இந்த புதிய வசதி தற்போது ஆண்ட்ராய்டு, ஐபோன்களுக்கு அறிமுகமாகியுள்ளது. படிப்படியாக அனைத்து மொபைல் போன்களிலும் இந்த வசதி கொண்டு வரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த புதிய வசதி பயனர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.