பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை சோசியல் மீடியா பயன்படுத்துகின்றனர். இன்றைய இளம் தலைமுறையினர் ரீல்ஸ் எடுப்பதற்காக பொது இடங்களில் மக்களுக்கு தொந்தரவு அளிக்கின்றனர். அந்த வகையில் ஒரு வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. ஒரு இளம்பெண் ரயில் நிலையத்தில் வைத்து ஒரு பாடலுக்கு நடனமாடி ரிலீஸ் எடுக்கிறார். இதனை பார்த்த ஒருவர் அந்த இளம்பெண்ணை தள்ளிவிட்டு பொது இடத்தில் இப்படி ரீல்ஸ் எடுக்கலாமா? என கேள்வி கேட்கிறார். தன்னை தள்ளிவிட்டதால் கோபத்தில் இளம்பெண் அந்த நபருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வைரல் ஆனது. அந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பொது இடத்தில் ரீல்ஸ் உருவாக்குவது எவ்வளவு சரியானது என்ற கேள்வியை எழுப்பி விவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் சிலர் தேவை இல்லாமல் அந்த நபர் அந்த பெண் ரீல்ஸ் எடுக்கும் போது தலையிட்டிருக்க வேண்டாம் என்பது போல கருத்து தெரிவித்து வருகின்றனர். பொது இடங்களில் ரீலிஸ் எடுப்பது தொடர்பாக ஏற்கனவே பல மோதல்கள் நடந்துள்ள நிலையில், இந்த சம்பவம் மீண்டும் அது பற்றிய விவாதத்தை கிளப்பியுள்ளது.