பிரபல நடிகை ரேஷ்மா ஒரு சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார். நடிகர் விஷ்ணு விஷால், சூரி நடிப்பில் வெளியான வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற படத்தில் புஷ்பா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் இவருக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது. தற்போது இவர் சீரியல்களில் நடித்து வருகிறார். தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வருகிறார். மேலும் விமல் நடிப்பில் ஓடிடியில் வெளியாகி அமோகமான வரவேற்பை பெற்ற விலங்கு வெப் சீரிஸில் கிச்சாவின் மனைவியாக இவர் நடித்திருந்தார்.
இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய ரேஷ்மா, “புஷ்பா கதாபாத்திரத்தில் நடிக்க மறுத்ததாக கூறினார். இதுகுறித்து கூறுகையில் புஷ்பா கதாபாத்திரத்தில் முதலில் நடிப்பதற்கு நான் மறுத்தேன். ஆனால் இயக்குனர் கிளாமர் சீன் எதுவும் கிடையாது என்று சொன்னார். அதனால்தான் நடித்தேன். ஆனால் இந்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை” என்று கூறியுள்ளார்.