LIVE TN Budget 2025-26 : `உழவரைத் தேடி வேளாண்மை திட்டம்!' - வேளாண் பட்ஜெட் உரையில் அமைச்சர்
Vikatan March 15, 2025 02:48 PM
உழவரைத் தேடி வேளாண்மை திட்டம்! மலைவாழ் உழவர் முன்னேற்றத் திட்டத்துக்கு ரூ.22.80 கோடி ஒதுக்கீடு மானாவாரி நிலங்களில் மண் வளத்தை மேம்படுத்த ரூ.24 கோடி ஒதுக்கீடு நெல் சாகுபடி பரப்பினை அதிகரிக்க ரூ. 160 கோடி ஒதுக்கீட்டில் `நெல் சிறப்பு தொகுப்பு திட்டம்’ ரூ. 42 கோடியில் முதலமைச்சரின் உழவர் நல சேவை மையங்கள்! சிறுதானிய பயிர்கள் பரப்பு, உற்பத்தி உற்பத்திதிறனை அதிகரிக்க தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் - ரூ. 52 கோடி ஒதுக்கீடு கடந்த 4 ஆண்டுகாலத்தில் அறிவிக்கப்பட்ட திட்டங்களில் நிறைவேற்றப்பட்டவை:

கடந்த 4 ஆண்டுகாலத்தில் வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களில் நிறைவேற்றப்பட்டவை:

``சாகுபடி பரப்பு 2023-24 ஆண்டில் 151 லட்சம் ஏக்கராக உயர்ந்திருக்கிறது. இருபோக சாகுபடி பரப்பும் 33,60,000 ஏக்கர் என்ற அளவினை எட்டியிருக்கிறது.

கேள்வரகு உற்பத்தி திறனில் முதலிடம், மக்காச்சோளம், கரும்பு, எண்ணெய் வித்துகள் உற்பத்தியில் இரண்டாம் இடம், நிலக்கடலை, குறுதானியங்கள் உற்பத்தியில் மூன்றாம் இடத்திலும் தமிழ்நாடு முன்னேறியிருக்கிறது.

இயற்கைப் பேரிடர்கள் பாதித்தபோதிலும், 3,46,38,000 மெட்ரிக் டன் உணவு தானியம் உற்பத்தி நடந்திருக்கிறது.” - எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம்

`உழவர்களை பாதுகாத்தால் அவர்கள் நாட்டைப் பாதுகாப்பார்கள்’ - எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம்

`உழவர்களை பாதுகாத்தால் அவர்கள் நாட்டைப் பாதுகாப்பார்கள். விவசாயிகளுக்கு 1.81 லட்சம் புதிய பாசன மின் இணைப்புகள் வழங்கப்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் சாகுபடி பரப்பு 151 லட்சம் ஹெக்டராக உயர்ந்திருக்கிறது. தமிழ்நாடு கேழ்வரகு உற்பத்தியில் முதலிடத்திலும், கரும்பு உற்பத்தியில் இரண்டாம் இடத்திலும், நிலக்கடலை விளைச்சலில் மூன்றாவது இடத்திலும் இருக்கிறது.

உயிர்காக்கும் அன்னையைப் போன்றவர்கள் உழவர்கள். அவர்கள் வாழ்வில் இந்த வேளாண் பட்ஜெட் வளர்ச்சியைக் கூட்டும் என நம்புகிறேன்.”

இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல்! MRK பன்னீர் செல்வம்

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நேற்று 2025-26-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, சுமார் 2 மணி நேரம் 40 நிமிடங்கள் புதிய அறிவிப்புகளை பட்டியலிட்டிருந்தார். இந்த நிலையில், இன்று 2026ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.

2021-ம் ஆண்டு தி.மு.க ஆட்சி பொறுப்பேற்றது முதல், வேளாண்மைக்கு என்று தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. அதன் அடிப்படையில் 5-வது முறையாக, காலை 9:30 மணிக்கு வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்ய தொடங்கி இருக்கிறார். இந்த பட்ஜெட்டில் வங்கிகளில் வேளாண்மைக்காக வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு விவசாயிகளிடம் இருக்கிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.