பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!
Dhinasari Tamil March 15, 2025 05:48 PM

#featured_image %name%

பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் வெள்ளி கிழமை மாலை நடை திறக்கப்பட்டது. இன்று காலை பூஜை வழிபாடுகள் துவங்கியது.

தந்திரி கண்டரரு ராஜீவரரு, பிரம்மதத்தன் முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி கோவில் நடையை திறந்து வைத்து பூஜை அபிஷேகம் வழிபாடு மேற்கொண்டார்.

இன்று (மார்ச் 15) முதல் மார்ச் 19ம் தேதி வரை நாள்தோறும் வழிபாடுகள் நடைபெறுகிறது.

மார்ச் 19ம் தேதி இரவு அத்தாழ பூஜை முடிந்த பின்னர், அரிவராசனம் பாடல் ஒலிக்கப்பட்டு, இரவு 10.30 மணிக்கு நடை அடைக்கப்படும்.

இம்முறை 18ம் படி ஏறிய பின் சாமியை தரிசனம் செய்ய சோதனை அடிப்படையில் புதிய வழிவகை செய்யப்பட்டு உள்ளது. 18ம் படி வழியாக சந்திதானம் வந்த பிறகு, மேம்பாலம் வழியாக இல்லாமல் கொடிமரத்தில் இருந்து நேரிடையாக கோவில் நடை பகுதிக்கு இரண்டு வரிசையாக செல்லலாம்.

இந்த நடைமுறை மூலமாக இம்முறை பக்தர்களுக்கு கூடுதல் நேரம் தரிசனம் செய்ய வாய்ப்பு கிடைக்கும்.

பக்தர்களுக்கு இனிமையான அனுபவத்தை உறுதி செய்வதற்காக திருவிதாங்கூர் தேவசம் வாரியம் ஒரு வரலாற்றுப் பணியைத் தொடங்கியுள்ளது.

சபரிமலைக்கு வருகை தரும் லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்களுக்கு மிகவும் வசதியான மற்றும் வசதியான தரிசன முறையை திருவிதாங்கூர் தேவசம்போர்டு தயாரித்து வருகிறது.

18வது படியில் ஏறும் ஐயப்ப பக்தர்களை, கொடிக்கம்பத்திலிருந்து மேம்பாலம் கடந்து, நேரடியாக சன்னதியின் முன்புறம் அழைத்துச் செல்ல ஒரு அமைப்பு தயாரிக்கப்பட்டுள்ளது.

மீனமாச பூஜைக்காக கோயில் திறக்கப்பட்டு மார்ச் 14 ஆம் தேதி மாலை 5 மணிக்கு இந்த புதிய வழியாக பக்தர்கள் தரிசனம் தொடங்கியது . மேம்பாலம் வழியாக தரிசன முறை பக்தர்களை 2 முதல் 5 வினாடிகள் வரை தரிசனம் செய்ய அனுமதித்தால், புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், 20 முதல் 30 வினாடிகள் வரை ஐயப்பனை தரிசனம் செய்ய முடியும்.

புதிய அமைப்புக்குத் தயாராவதற்கு பக்தர்களை இரண்டு வரிசைகளாகப் பிரிக்க புதிய மேடைகள் மற்றும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. கொடிமரத்திலிருந்து இரண்டு வரிசைகளில் ஐயப்ப பக்தர்கள் கோயிலின் முன்புறம் நுழைய அனுமதிக்கப்படுவார்கள். தரிசனம் முடிந்ததும், பக்தர்கள் ஏற்கனவே உள்ள நடைமுறையின்படி கோயிலை விட்டு வெளியேறுவார்கள்.

இந்த வசதியை செய்த
தேவசம் அமைச்சர் ஸ்ரீ வி.என். வாசவன், சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவரு தேவசம், சபரிமலை சிறப்பு ஆணையர் ஸ்ரீ ஜெயகிருஷ்ணன், ஏடிஜிபி ஸ்ரீஜித், தேவசம் ஊழியர்கள்.
தேவஸ்தானத்துக்கு பக்தர்கள் நன்றி மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் சபரிமலையில் ஜால்ரா அடிக்கும் சில நபர்களுக்கு பக்தர்களுடன் வராமல் தனியாக வந்து கூட்ட நெரிசல் இல்லாமல் சிக்கி சிரமம் இல்லாமல் தரிசனம் செய்யும் விஐபி என்ற பெயரில் பின்புறமாக சென்று தரிசனம் செய்யும் சில நடைமுறைகளை கட்டுப்படுத்த பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

48 நாள் விரதம் இருந்து இருமுடி கொண்டு வரும் பக்தர்கள் பின் வரிசையில் விரதம் இல்லாமல் வரும் பக்தர்கள் முன் வரிசையில் முன்பு பக்தர்கள் முதல் வரிசையில் குழந்தைகளையும் மாற்றத் திறனாளிகள் மற்றும் வயது முதிர்ந்த பெண்கள் பெரியோர்களை அனுமதித்து தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வந்தது.

கோர்ட்டும் முதல் வரிசையில் குழந்தைகளை பெரியோர்களை அனுமதிக்க வேண்டும் என்று தான் கூறியுள்ளது ஆனால் இவர்கள் தற்போது அவர்களுக்கு வசதியாக மட்டுமே இந்த புதிய வழிநடைமுறையை கொண்டு வந்துள்ளனர்

இந்த வழிமுறையினால் குழந்தைகள் சாமி பார்ப்பது மிக மிக சிரமம். முதல் வரிசை என்பது தற்போது தேவஸ்தானம் ஊழியர்களும் அவர்களுக்கு தெரிந்தவர்களும் முக்கியமானவர்களும் இந்த நடைமுறை அவர்கள் சிரமமின்றி தரிசனம் செய்வதற்காக இந்த வழி தற்போது முதல் வழி அனுமதிக்கப் படுகிறது

முன்பு முதல் வரிசையில் சென்று தரிசனம் செய்வோம் இப்பொழுது தரிசனம் செய்ய ஓர் ஐந்து அடி தள்ளி நின்று தரிசனம் செய்ய வேண்டும் அப்பொழுது பின் வரிசையில் வரும் குழந்தைகள் சாமி தரிசனம் செய்வது சிரமம்.

முன்வரிசையில் விஐபிகள் நின்று கொண்டிருந்தால் பின்னாடி வரும் குழந்தைகள் எப்படி தரிசனம் செய்ய முடியும் இது பக்தர்கள் தரிசனம் செய்ய 20 நிமிடம் 30 நிமிடம் கூடுதலாக நேரம் கிடைக்கும் என்று தெரிவித்துவிட்டு இவர்கள் முதல் வரிசையில் நிற்கும் போது மற்ற பக்தர்கள் லைனில் வரும் பொழுது தள்ளுமுள்ளு ஏற்படுகிறது என்ற காரணத்தினால் இவர்கள் மீது நாம் இடித்து கொண்டு செல்லாமல் இருக்க இவர்கள் எந்த ஒரு இடைஞ்சலும் இல்லாமல் தரிசனம் செய்வதற்காகவே விஐபி அந்த முதல் வரிசையை விட்டுவிட்டு பக்தர்களை பின்னாடி இருந்து தரிசனம் செய்ய அனுமதித்துக் கொண்டிருக்கிறார்கள்

பக்தர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைத்த தேவஸ்தானம் முதல் வரிசை வரைக்கும் பக்தர்கள் வந்து தரிசனம் செய்ய அனுமதித்திருக்க வேண்டும் இந்த ஏற்பாடும் விஐபிகள் எந்த ஒரு சிரமமும் இன்றி தரிசனம் செய்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள புதிய வழிமுறை ஏற்பாடு தரிசனம் ஆகும் .

பக்தர்களுக்கு வசதி செய்கிறேன் என்ற பெயரில் அவர்கள் விஐபிகளை இடைஞ்சல் இல்லாமல் தரிசனம் செய்வதற்காகவே சில ஏற்பாடுகள் செய்கிறார்கள் முன்பு முதல் வரிசையில் விஐபிகள் நிக்கும் பொழுது நாமும் முதல் வரிசையில் செல்லும் பொழுது அவர்களை இடுத்திக்கொண்டு செல்வோம் காவல்துறை இழுத்து விடுவார்கள் இப்பொழுது அந்த சிரமம் கிடையாது .

விஐபிகள் எவ்வளவு நேரம் வேணாலும் நின்று கொண்டு அங்கே தரிசனம் செய்யலாம்.இந்த நடை முறையில் மாற்றம் செய்து கடும் விரதம் இருந்து வரும் பக்தர்கள் ஐயனை நன்கு தரிசனம் செய்ய வசதி ஏற்படுத்திக் கொடுக்க தேவமம்போர்டு நடவடிக்கை எடுக்க பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்

News First Appeared in

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.