சென்னையில் உள்ள கிழக்கு கடற்கரை சாலை, வெட்டுவாங்கேணி பகுதியில் வசித்து வருபவர் ராஜா (42). இவர் கால் டாக்சி ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். இவரின் மீது அங்குள்ள காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் இருக்கின்றன.
ரௌடியாகவும் உள்ளூரில் வளம் வந்துள்ளார். இதனிடையே, நேற்று இரவு நேரத்தில் தேனாம்பேட்டையில் உள்ள திருவள்ளுர் - எல்டாம்ஸ் சாலையில் நடந்த சென்றார். அச்சமயம் இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் கும்பல், அவரை சரமாரியாக வெட்டிக்கொலை செய்து தப்பிச் சென்றது.
இதையும் படிங்க:
வெட்டுக்காயத்தினால் படுகாயமடைந்த ராஜா, நிகழ்விடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், ராஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் பழைய குற்றவாளி ராஜாவை முன்விரோதத்தில் கொலை செய்தது தெரியவந்தது. இந்த விஷயம் தொடர்பாக அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: