தமிழக சட்டசபையில் நேற்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இன்று தொடர்ச்சியாக இரண்டாவது நாள் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டை பொதுமக்கள் நேரடியாக பார்க்க வேண்டும் என்பதற்காக பல இடங்களில் நேரடி ஒளிபரப்பு செய்ய எல்இடி திரை வைக்கப்பட்டு இருந்தது.
அந்த வகையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியிலும் பட்ஜெட்டை நேரடியாக ஒளிபரப்பு செய்வதற்காக ஒரு எல்இடி திரை வைக்கப்பட்டு இருந்தது. இந்த எல்இடி திரையில் திடீரென சீமானின் செய்தியாளர் சந்திப்பு ஒளிபரப்பப்பட்டது. அதே சமயத்தில் அந்த பேட்டி ஆங்கிலத்தில் இருந்தது. மேலும் இதனை அந்த பகுதியில் இருந்த மக்கள் மிகவும் ஆச்சரியத்துடனும் அங்கு கூடி நின்று பார்த்துக் கொண்டிருந்தனர்.