இந்தோனேசிய பாடகி சில்வி குமலசாரி பாடிய “Culik Aku Dong” என்ற பாடல் தற்போது இந்தியாவில் பெரும் வைரலாகி வருகிறது. இந்த பாடலின் ரிதமும், குமலசாரியின் கவர்ச்சி நிறைந்த ஸ்டேஜ் நிகழ்ச்சி இந்திய ரசிகர்களை ஈர்த்துள்ளது. பாடல் புரியாவிட்டாலும், அதன் உற்சாகமான இசை மற்றும் குமலசாரியின் ஆட்டம், மிடுக்கான அணுகுமுறை இந்தியர்களை தன் வசம் ஈர்த்துள்ளது. East Java பகுதியில் உள்ள Berkah Talenta என்ற ஸ்டுடியோவில் பதிவுசெய்யப்பட்ட இந்த பாடலின் லைவ் நிகழ்ச்சி, சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது. பாடகியின் தன்னம்பிக்கை நிறைந்த நடனமும், இசைக்குழுவின் உற்சாகமான நிகழ்த்தலும், ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
இந்த வீடியோ குறிப்பாக தென்னிந்தியாவில், அதிலும் தமிழ்நாட்டில், அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழ்நாட்டின் சமூக வலைதளங்களில், இந்த வீடியோவை மீண்டும் மீண்டும் பகிர்ந்து, ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் குமலசாரியின் நிகழ்ச்சியை புகழ்ந்து வருகின்றனர். பாடலின் மொழியை புரிந்து கொள்ளாமலும், அதன் இசையும் பேபி டோல் போன்று காட்சியளிக்கும் குமலசாரியின் ஸ்டைலும், ரசிகர்களை கட்டிப்போட்டுள்ளது. இது இசைக்கு மொழி தேவையில்லை என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. மேலும் அதே சமயத்தில் இந்த பாடலை முன்பாக ஒரு நாடகத்தில் பாடியுள்ள நிலையில் அந்தப் பாடகிமேடையில் பாடியுள்ளதாக கூறி அந்த வீடியோவையும் இணைத்து வைரல் ஆக்கி வருகின்றனர்.
View this post on Instagram
View this post on Instagram