தொடர்ந்து ஏமாற்றம் அளிக்கும் வேளாண் நிதிநிலை அறிக்கை!
Dhinasari Tamil March 16, 2025 04:48 AM

#featured_image %name%

வேளாண் நிதிநிலை அறிக்கை 2025- 26 தொடர்ந்து ஏமாற்றம் அளிக்கும் நிதிநிலை அறிக்கை

வேளாண் நிதிநிலை அறிக்கை விவசாயிகளுக்கு பயனுள்ள புதிய திட்டங்கள் எதுவும் இல்லாமல் தொடர்ச்சியான ஒரு நிதிநிலை அறிக்கை ஆகவே உள்ளது பெரிய ஏமாற்றத்தை தந்துள்ளது கடந்தாண்டை விட 3000 கோடி ரூபாய் மட்டுமே கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது விவசாயிகளுக்கான பட்ஜெட் சுமார் 50 ஆயிரம் கோடிக்கு மேல் இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் ஏமாற்றம் அளித்துள்ளது

ஆட்சியில் நான்காம் ஆண்டில் ஐந்தாவது நிதிநிலை அறிக்கை என்பதால் சிறப்பான திட்டங்கள் மற்றும் விவசாயிகளின் வருவாயை பெருக்க ஏதுவான திட்டங்கள் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு மட்டுமில்லாது விவசாய சங்கப் பிரதிநிதிகள் விவசாயிகள் தங்கள் தேவைகளை குறித்து கலந்தாய்வு கூட்டங்களில் அரசிடம் கொடுக்கப்பட்ட எந்த ஒரு கோரிக்கையும் சேர்க்கப்பட்டதாக தெரியவில்லை

சிறு தானியங்கள், எண்ணெய் வித்துக்கள்,பயறு வகை உற்பத்தி, மலை பயிர் மேம்பாடு, சூரிய சக்தி மற்றும் இயந்திர மையமாக்கள் அனைத்தும் மத்திய அரசின் திட்டங்கள் தொடர்ந்து அமல்படுத்தப்பட்டுள்ளது

மூன்றுலட்சத்திற்கு மேற்பட்ட ஏக்கரில் சாகுபடி நடைபெறும் நிலையில் 35 ஹெக்டர் நிலங்களுக்கு மட்டும் பயிர் காப்பீடு என்பது அர்த்தமற்றது சாகுபடி செய்யப்பட்டுள்ள அனைத்து பயிர்களுக்கும் பயிர் காப்பீடு வழங்க வேண்டும் என்ற வகையில் பயிர் காப்பீடு ஒரு ஏமாற்றம் அளிக்கக் கூடிய நிலையில் தான் உள்ளது

விவசாயம் வயலுக்கு தண்ணீர் தரக்கூடிய சி மற்றும் டி வாய்க்காலில் சுமார் 3000 கிலோமீட்டர் தூர்வாரப்படும் என அறிவித்துள்ளது ஆனால் இவைகள் பொதுப்பணி துறையின் மூலமாக தூர்வாரப்பட்டால் சிறப்பாக இருக்கும் ஊரக வளர்ச்சித்துறை மற்றும் வேளாண் பொறியியல் துறை போன்றவற்றால் தூர்வாரப்படும் என கூறுவது ஏமாற்றம் அளிக்கிறது இது குறித்து அரசின் கொள்கை மாற்றம் வேண்டும் என்ற கோரிக்கை இந்த நிதிநிலை அறிக்கைகளும் நிராகரிக்கப்பட்டுள்ளது வேதனை அளிக்க கூடியதாக விவசாயிகள் உணருகிறார்கள்

வரவேற்கப்பட வேண்டிய விஷயம் என்றால் முந்திரிக்காக தனி வாரியம் அமைத்துள்ளது மற்றும் M S சாமிநாதன் விருது பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும்
விதை உற்பத்தியில் கவனம் கொடுத்து அவற்றை பெருக்க பாரதிய கிசான் சங்கம் வழங்கிய பரிந்துரைகள் முழுமையாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது காணும்பொழுது மகிழ்ச்சியாக உள்ளது அதாவது விதை உற்பத்தி விவசாயிகளை அதிகப்படுத்த வேண்டும். விதைகள் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மூலமாக சுத்திகரிக்கப்பட்டு விற்பனை செய்ய வேண்டும் என்ற பரிந்துரை ஏற்கப்பட்டுள்ளதர்க்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேம்

  • வீரசேகரன்
    மாநில செயலாளர். பாரதீய கிசான் சங்கம்

News First Appeared in

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.