தென்காசி மாவட்டம் கடையநல்லூர் சேவல்விளை மூன்றாவது தெருவை சேர்ந்தவர் முருகன்(35). இவரது மனைவி செல்வி(30). இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். கடந்த 11ஆம் தேதி செல்வி தனது வீட்டில் மூச்சு பேச்சின்றி மயங்கி கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் செல்வியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் செல்வி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை சந்தேக மரணம் என போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் இதில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.