சீனாவை சேர்ந்த யாங் என்பவர் ஒரு நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்க்கிறார். இவர் தனது நிறுவனத்தில் வேலை பார்க்காத 22 ஊழியர்களுக்கு சுமார் 8 வருடங்களாக ஊதியம் வழங்கி வந்துள்ளார். இவ்வாறாக இல்லாத ஊழியர்களுக்கு ஊதியம் வாங்கி யாங் 19 கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளார். முதலில் ஊழியர்களை சேர்ப்பது போல நாடகமாடி அவர்களின் சம்பளத்தை தனது வங்கி கணக்கில் செலுத்தி வந்துள்ளார்.
லேபர் சர்வீசஸ் கம்பெனி நடத்திய விசாரணையில் இந்த உண்மை தெரியவந்தது. இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் யாங்குக்கு 10 ஆண்டுகள் 2 மாதம் ஜெயில் தண்டனை விதித்து உத்தரவு பிறப்பித்தது. மேலும் இழப்பீடாக 1.32 கோடியை யாங்கும், 1.44 கோடியை அவரது குடும்பமும் தர வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.