பாகிஸ்தான் நாட்டில் சமீபத்தில் ஜாபர் எக்ஸ்பிரஸ் ரயிலை பலுச்சிஸ்தான் பயங்கரவாதிகள் கடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட ஏராளமான பயணிகளை பினைய கைதிகளாக பிடித்து வைத்த நிலையில் சிறையில் இருக்கும் தங்கள் ஆதரவாளர்களை விடுவித்தால்தான் அவர்களை விடுவிப்போம் என்று கோரிக்கை விடுத்தனர். அதாவது ரயில் சுரங்கப்பாதைக்குள் செல்லும்போது தண்டவாளத்தை வெடிவைத்து தகர்த்து ரயில் கவிழ்ந்த நேரத்தில் பயங்கரவாதிகள் ரயிலை கடத்தினர். அந்த ரயில் பெட்டியில் பாகிஸ்தான் ராணுவ வீரர்களும் இருந்த நிலையில் அவர்களுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சூடு சண்டை ஏற்பட்டது.
இதில் சில ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில் 48 மணி நேரத்தில் கடத்தப்பட்ட ரயிலை பாகிஸ்தான் ராணுவம் மீட்டதோடு 354 பனையக் கைதிகளை மீட்டதாகவும் 33 பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றதாகவும் தெரிவித்தது. இந்த நிலையில் பிஎல்ஏ கிளர்ச்சி படையைச் சேர்ந்த செய்தி தொடர்பாளர் ஜியாந்த் பலோச் ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். அதாவது 214 ராணுவ வீரர்களை அவர்கள் தூக்கிலிட்டதாக கூறியுள்ளார். ஆனால் இதற்கு பாகிஸ்தான் ராணுவம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் அவர்கள் மிகைப்படுத்தப்பட்ட நம்ப முடியாத பாகிஸ்தான் அரசும் தெரிவித்துள்ளது.