நடிகை தமன்னா பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வந்த நிலையில், இருவரும் சமீபத்தில் பிரேக் அப் செய்து பிரிந்து விட்டார்கள் என்றும் இருவரும் தங்கள் சமூக வலைத்தள பக்கங்களில் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படங்களை நீக்கிய நிலையில் பிரேக்கப் வதந்தி காட்டுத்தீ போல பரவியது.
ஆனால், அதற்கு. முற்றுப்புள்ளி வைக்கும் அளவுக்கு ஹோலி பண்டிகையின் போது தமன்னா மற்றும் விஜய் வர்மா இருவரும் ஒன்றாக நடிகை ரவீனா டாண்டன் நடத்திய ஹோலி பண்டிகை நிகழ்ச்சிக்கு சென்று இருப்பது ரசிகர்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
வட இந்தியாவில் ஹோலி பண்டிகை மிகப் பெரிய நிகழ்வாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல முன்னணி நடிகர்களும் நடிகைகளும் அதற்கான விழாக்களை ஏற்பாடு செய்து பிரபல நடிகர்களை அங்கே பங்கேற்க செய்து ஆட்டம் பாட்டத்துடன் உடல் முழுவதும் கலர் பூசி தண்ணீர் அடித்துக் கொண்டு விளையாடும் நிகழ்வுகள் வட இந்தியாவில் நேற்று களைகட்டின.
தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வளம் வந்த தமன்னா கடந்த சில ஆண்டுகளாக இந்தியில் படங்களில் நடிப்பதும் வெப் சீரிஸ்களில் காட்டுதனமான கவர்ச்சியை காட்டி, படுக்கையறை காட்சிகளிலும் படு தாராளமாக நடித்த வருகிறார்.
லஸ்ட் ஸ்டோரீஸ் சீசன் 2வில் விஜய் வர்மா உடன் ஆபாச காட்சிகளில் எல்லை மீறி நடித்த நிலையில் இருவருக்கும் காதல் தீ பற்றிக் கொண்டது. கடந்த ஆண்டு இறுதியிலேயே இருவரும் கல்யாணம் செய்து கொண்டு பாலிவுட் புதிய ஜோடிகளாக மாறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திருமணத்துக்கு விஜய் வர்மா இன்னும் தயாராகவில்லை என்றும் தமன்னாவின் வீட்டில் வற்புறுத்துவது அதிகமான நிலையில், இருவரும் ஒருவரை ஒருவர் பிரிந்து விட்டதாக இந்தி மீடியாக்கள் செய்திகளை வெளியிட்டன.
ஆனால், தமன்னா மற்றும் விஜய் வர்மா இருவரும் அது தொடர்பாக எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. இந்நிலையில் நேற்று ஆளவந்தான், கேஜிஎஃப் உள்ளிட்ட படங்களில் நடித்த பிரபல இந்தி நடிகை ரவீனா டண்டன் தனது வீட்டில் நடத்திய ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தில் தமன்னா மற்றும் விஜய் வர்மா பங்கேற்றத்தை பார்த்த ரசிகர்கள் இருவரும் பிரேக்கப் செய்யவில்லையா என்கிற கேள்விகளை எழுப்பி உள்ளனர்.
அல்லது இருவரையும் சேர்த்து வைக்கும் முயற்சியில் நடிகை ரவீனா டண்டன் ஈடுபட்டு வருகிறாரா? என்றும் கேட்கத் தொடங்கியுள்ளனர். இருவரும் ஒன்றாக கைகோர்த்துக் கொண்டு வராமல், தனித்தனியாக அவரது வீட்டுக்குப் போயுள்ளனர். மேலும், ஹோலி கொண்டாடிய புகைப்படங்களையும் ஜோடியாக வெளியிடவில்லை. தமன்னா தனியாக ரவீனா டாண்டன் மகளுடன் ஹோலி கொண்டாடும் வீடியோவை மட்டுமே வெளியிட்ட நிலையில், இருவரும் பிரேக்கப் செய்தது உறுதிதான் என்றும் கூறுகின்றனர்.