“உலக சாதனை படைத்த இந்திய வீரர்”… எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த எலான் மஸ்க்… செம வைரல்..!!
SeithiSolai Tamil March 15, 2025 06:48 PM

இந்திய தடகள வீரர் விஸ்பி கரடி. இவர் கிரேக்க கட்டிடக்கலையால் கட்டப்பட்ட மிகவும் பிரம்மாண்டமான தூண்களை 2 நிமிடம் 10.75 வினாடிகள் தாங்கி தாங்கி நின்று உலக சாதனை படைத்தார். இந்த தூண்கள் ஒவ்வொன்றும் தோராயமாக 160 கிலோ கிராம் எடையும், 123 உயரமும், 20.5 அங்குள்ள விட்டமும் உடையது. ஹெர்குலஸ் தூண் பிடிப்பு என்பது உடல் மற்றும் மன வலிமையின் ஒரு சோதனை ஆகும். மேலும் இவர் பல கருப்பு பெல்ட்டுகளை வைத்திருப்பவர்.

ஆயுதமேந்தாத போரில் கமாண்டோக்களின் பயிற்சியாளர் மற்றும் ஒரு உடற்பயிற்சி நிபுணர் ஆவார். இவர் ஏற்கனவே 2 உலக சாதனைகள் படைத்தவர். அதில் ஒரு நிமிடத்தில் அதிகப் பான கேன்களை கையால் நசுக்கியவர் மற்றும் ஒரு நிமிடத்தில் அதிக இரும்பு கம்பிகளை தலையால் வளைத்தவர் என்ற கின்னஸ் உலக சாதனையை கையில் வைத்திருப்பவர். இந்த நிலையில் இவர் அதிக நேரம் ஹெர்குலஸ் தூண்களை பிடித்து உலக சாதனை படைத்த வீடியோவை உலகின் மிகப் பெரிய தொழிலதிபரான, கோடீஸ்வரர் எலான் மஸ்க் அந்த வீடியோவை மீண்டும் தனது இணையதள பக்கத்தில் பகிர்ந்து கொண்டு உள்ளார்.

இந்த வீடியோ 10.9 மில்லியனுக்கும், அதிகமான பார்வையாளர்களையும், 74 ஆயிரத்திற்கும் அதிகமான லைக்குகளையும் பெற்று உலக அளவில் கரடியின் சாதனை மேலும் அங்கீகரிக்கப்பட்டது. இந்த மறுப்பதிவு வீடியோவிற்கு பதிலளிக்கும் வகையில் தடகள விரான கரடி தனது இணையதள பக்கத்தில் தெரிவித்ததாவது, தான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், எலான் மஸ்க் தனது வீடியோவை இணையதள பக்கத்தில் பகிர்ந்து கொண்டது, உண்மையிலேயே ஒரு ஆச்சரியமான நிகழ்வாக கருதுவதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் உடல் வலிமை துறையில் ஒரு இந்தியர் உலக அளவில் பாராட்டப்படுவது எனக்கு மிகுந்த பெருமையை தருகிறது எனவும் தெரிவித்திருந்தார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.