உலகிலே மிக அழகான கையெழுத்து…. இளம்பெண்ணுக்கு உலக அளவில் அங்கீகாரம்…!!
SeithiSolai Tamil March 15, 2025 06:48 PM

நேபாளத்தில் வசித்து வரும் இளம் மாணவி பிரகிருதிமல்லா. இவர் உலக அளவில் மிக அழகான கையெழுத்தை கொண்டவர் என அங்கீகாரம் பெற்றுள்ளார். இவரது கையெழுத்து உலகம் முழுவதும் வைரல் ஆவதற்கு காரணம் பிரகிருதியின் பள்ளி பணிகளில் ஒன்று ஆன்லைனில் பகிரப்பட்டபோது அவரது கையெழுத்து வைரலானது. தனது 13 வயதிலேயே எட்டாம் வகுப்பு பயின்று கொண்டிருக்கும் போது தனது கையெழுத்தால் அனைவரது கவனத்தையும் பெற்றார்.

அவரது கையெழுத்து மிகவும் துல்லியமாக, சீரான இடைவெளியுடன், ஒவ்வொரு எழுத்தும் அச்சிட்ட எழுத்துப் போல் இருப்பதால் உலகெங்கிலும் உள்ள மக்களால் பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறார். இந்த நிலையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 51 வது ஒன்றிய ஸ்பிரிட் தினத்தை முன்னிட்டு அந்நாட்டு தலைமைக்கும், குடிமக்களுக்கும் அவர் எழுதிய வாழ்த்து கடிதம் அவரது குறிப்பிடத்தக்க எழுத்து திறனுக்காக நேபாள ஆயுதப் படைகளால் கவுரவிக்கப்பட்டுள்ளார். தற்போதைய டிஜிட்டல் காலங்களில் எழுதும் பழக்கம் குறைந்து வருவதால் பிரகிருதி போன்றவர்கள் எழுதும் திறனை இன்றைய கால படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.