PWD: `ரூ.1.50 லட்சம் கையாடல்' - 40 ஆண்டுகள் கழித்து பொதுப்பணித்துறை அதிகாரிக்கு தண்டனை
Vikatan March 15, 2025 08:48 PM

புதுக்கோட்டை மாவட்டம், மூட்டம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஆரணி குளத்தில் கடந்த 1984-85 -ஆம் ஆண்டில் கலிங்கு வெட்டியதில் ரூ.1,51,000 கையாடல் செய்ததாக கடந்த 1987 -ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரால் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அப்போது, பொதுப்பணித் துறையில் பணியாற்றிய உதவி செயற்பொறியாளர்கள் பிரபாகரன், தங்கரத்தினம் மற்றும் பணி ஆய்வாளர் நடராஜன் ஆகிய மூவர் மீது கடந்த 1991 - ஆம் ஆண்டு குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு, புதுக்கோட்டை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

தீர்ப்பு...

இந்த வழக்கு விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கில் குற்றச்சாட்டுக்கு உள்ளான பிரபாகரன் மற்றும் தங்கரத்தினம் ஆகிய இரண்டு அதிகாரிகளும் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதால், தற்போது உயிரோடு இருக்கும் அப்போதைய பணி ஆய்வாளர் நடராஜனுக்கு மட்டும் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும், 5000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

அதே வேளையில், இரண்டு ஆண்டுகள் தான்  சிறை தண்டனை என்பதால், மேல்முறையீடு செய்வதற்கு நடராஜனுக்கு வாய்ப்பு அளித்து அவர் ஜாமினிலும் விடுவிக்கப்பட்டார். புதுக்கோட்டை அருகே 40 ஆண்டுகளுக்கு முன்பு 1.50 லட்சம் ரூபாய் கையாடல் செய்த வழக்கில் தற்போது குற்றம் நிரூபிக்கப்பட்டு அதிகாரிக்கு தண்டனை வழங்கப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : |

Part 02: |

80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.