ஐபிஎல் வரலாற்றில் மிக அதிக ரசிகர்கள் கொண்ட அணியாக விளங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK), 2025 சீசனுக்கான போட்டிக்குத் தயாராக இருக்கிறது! ஏற்கனவே ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள இந்த அணி, இந்த ஆண்டும் கோப்பையை கைப்பற்ற வேண்டும் என ரசிகர்கள் ஆவலுடன் இருக்கிறார்கள்.
தோனிக்கு இது கடைசி சீசன் என்ற தகவல் பரவியுள்ளதால், அவரது தலைமையில் CSK இன்னொரு பட்டம் வெல்ல வேண்டும் என்பதே அனைவரின் ஆசை. இதை சாதிக்க, அணியினர் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
CSK ரசிகர்களுக்கு சிறப்பு அறிவிப்பு!2025 ஐ.பி.எல் சீசனில், சென்னை அணியின் ஹோம் மைதானமான சேப்பாக்கத்தில் நடைபெறும் CSK போட்டிகளைக் காணும் ரசிகர்களுக்கு அதிரடி சலுகை!
CSK நிர்வாகம் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது – சென்னை மாநகரப் பேருந்துகளில் இலவச பயணம்!
முடிவுகள்:
போட்டிக்கான டிக்கெட்டை காண்பித்தால், சென்னை மாநகரப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம்.
இந்த இலவச வசதி போட்டி தொடங்குவதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பே மட்டுமே செல்லும்.
📅 மார்ச் 23 - CSK 🆚 மும்பை
📅 மார்ச் 28 - CSK 🆚 பெங்களூரு
📅 ஏப்ரல் 05 - CSK 🆚 டெல்லி
📅 ஏப்ரல் 11 - CSK 🆚 கொல்கத்தா
📅 ஏப்ரல் 25 - CSK 🆚 ஹைதராபாத்
📅 ஏப்ரல் 30 - CSK 🆚 பஞ்சாப்
📅 மே 12 - CSK 🆚 ராஜஸ்தான்