தமிழகத்தில் நேற்று திமுக அரசு பட்ஜெட்டை தாக்கல் செய்த நிலையில் இன்று வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறது. திமுக அரசு ஆட்சி பொறுப்பை ஏற்ற பிறகு வேளாண்மைக்கு தனியாக பட்ஜெட் தாக்கல் செய்து வரும் நிலையில் இன்று 5-வது முறையாக வேளாண்மை முறையாக வேளாண் பட்ஜெட் செய்யப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டை அந்த துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வேளாண்மை துறைக்கான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.
15700 பட்டியலின உழவர்கள் பயன்பெறும் வகையில் 60 முதல் 70 சதவீதம் வரை மானியம் பெறும் வகையில் 3 வருடங்களில் 61.12 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 36,000 மாணவர்கள் உயிர்மை வேளாண்மை பண்ணைக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள்.
மல்லிகை பூ சாகுபடியை ஊக்குவிக்க 1.6 கோடி நிதி ஒதுக்கீடு.
ரோஜா சாகுபடியை ஊக்குவிக்க ஒரு கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.