முன்னோர்களின் ஆரோக்கியம் காத்த மூலிகை தேநீர் தயாரிக்கும் முறை
Top Tamil News March 16, 2025 09:48 AM

பொதுவாக சமையல் பொருளில்  இஞ்சி இம்மியூனிட்டி பவரை கொடுக்கும் .ஏலக்காய் பல கிருமிகளை கொல்லும் .மிளகு பல நுண் கிருமிகளை அண்ட விடாமல் செய்யும் .மேலும் லவங்கப்பட்டையும் ,கிராம்பும் உடலில் கிருமிகள் தாக்காதவாறு பாதுகாக்கும் .இந்த பொருளை கொண்டு நம் ஆரோக்கியம் காக்கும் ஒரு மூலிகை தேனீர் எப்படி தயாரிக்கலாம் என்று காணலாம்

1. இஞ்சி,ஏலக்காய் ,லவங்கப்பட்டை ,கிராம்பு ,மிளகு இவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும் .
2.அடுப்பில்  200ML தண்ணீரை சூடு செய்ய வேண்டும். அதில் இந்த 5மூலிகைப் பொருட்களையும் போட்டு நன்றாக கொதிக்க விடவும்
3. இதனுடன் 10 துளசி இலையை போட்டு கொதிக்க விடவும்
4. தண்ணீர் கொதித்ததும் தேவைப்பட்டால் உங்கள் விருப்பத்தின்படி டீ தூள் சேர்த்துக் கொள்ளலாம் 5.தண்ணீர் கொதித்து வரும் பொழுது சுவைக்காக வெல்லம் அல்லது கருப்பட்டி சேர்த்துக்கொள்ளலாம்.
6.பின் வடிகட்டி காலை மாலை குடிக்கலாம் .
7.பொதுவாக எடுக்கும் டீக்கு பதிலாக இந்த மூலிகை டீயை எடுப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் சளி, இருமலில் இருந்து விடுபடலாம்
8.. இந்த மூலிகை டீயை சிறியவர் முதல் பெரியவர் வரை எல்லோரும் பருகி வந்தால் பல நோயிலிருந்து விடுபடலாம்

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.