ஒரு மிஸ்டு கால் போதும்..! உங்க பிஎஃப் பேலன்ஸ் ஈஸியா தெரிஞ்சிக்கலாம்..!
Newstm Tamil March 16, 2025 10:48 AM

உங்க பிஎஃப் அக்கவுண்ட் பேலன்ஸ தெரிஞ்சுக்க சில ஈஸியான வழிகளைப் பத்தி தெரிஞ்சுக்கலாம்.

உங்க மொபைல் நம்பர் யுஏஎன்ல ரெஜிஸ்டர் பண்ணியிருந்தா, உங்க ரெஜிஸ்டர் பண்ண மொபைல் நம்பர்ல இருந்து 9966044425க்கு ஒரு மிஸ்டு கால் குடுத்து தகவலை தெரிஞ்சுக்கலாம். இந்த நம்பருக்கு ஒரு மிஸ்டு கால் குடுத்ததுக்கு அப்புறம், இ பி எஃப் ஓல இருந்து ஒரு எஸ்எம்எஸ் வரும். அதுல அக்கவுண்ட் பேலன்ஸ் இருக்கும்.

7738299899க்கு ஒரு எஸ்எம்எஸ் அனுப்பி உங்க ஈபிஎஃப் அக்கவுண்ட் பேலன்ஸ் மற்றும் உங்க அக்கவுண்ட்ல கடைசியா போட்ட பணம் பத்தி தெரிஞ்சுக்கலாம். இதுக்கு, நீங்க ஒரு ஈபிஎஃப்ஓஹெச்ஓ இஎன்ஜி (SMS EPFOHO) டைப் பண்ணி உங்க ரெஜிஸ்டர் பண்ண நம்பர்ல இருந்து மெசேஜ் அனுப்பணும். இஎன்ஜி இங்க இங்கிலீஷ குறிக்குது. உங்களுக்கு வேற மொழில தெரிஞ்சுக்கணும்னா, அந்த மொழியோட முதல் மூணு எழுத்துக்களை எழுத வேண்டும்..

EPFO வெப்சைட்டுக்கு சென்று  எம்ப்ளாயி செக்ஷன்ல கிளிக் பண்ணுங்க, அதன் பின்  மெம்பர் பாஸ்புக் கிளிக் பண்ணுங்க. உங்க யுஏஎன் மற்றும் பாஸ்வேர்ட போட்டு, நீங்க பிஎஃப் பாஸ்புக்க ஆக்சஸ் பண்ணலாம். இது எம்ப்ளாயி மற்றும் வேலை குடுக்குறவங்க ரெண்டு பேரோட கான்ட்ரிபியூஷன், ஓப்பனிங் மற்றும் க்ளோசிங் பேலன்ஸ் எல்லாத்தையும் காட்டும். எந்த பிஎஃப் டிரான்ஸ்பர் பண்ணிருந்தாலும் அதோட மொத்த மற்றும் சேமிச்ச பிஎஃப் வட்டியோட அளவையும் காட்டும். ஈபிஎஃப் பேலன்ஸும் பாஸ்புக்குள்ள இருக்கும்.

நீங்க உமங் ஆப் மூலமா உங்க பிஎஃப் பேலன்ஸ செக் பண்ணலாம். உமங் அப்ளிகேஷன யூஸ் பண்ணி, நீங்க கிளைம் சப்மிட் பண்ணலாம், உங்க ஈபிஎஃப் பாஸ்புக்க பார்க்கலாம் மற்றும் உங்க கிளைம டிராக் பண்ணலாம். இதுக்கு, நீங்க ஆப்ல உங்க போன் நம்பர போட்டு ஒரு தடவ ரெஜிஸ்ட்ரேஷன முடிச்சா போதும்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.