இது தெரியுமா ? ஆட்டின் தலை இறைச்சியை சாப்பிடுவதால்...
Newstm Tamil March 16, 2025 10:48 AM

**ஆட்டிறைச்சி, நமது உடல் சூட்டை தணித்து, தோலுக்கு வலிமை அடையச் செய்து, சருமம் பளபளக்க நல்ல தீர்வாக உள்ளது.

**ஆட்டின் தலை இறைச்சியை சாப்பிடுவதால், நம்முடைய இதயம் சார்ந்த வலி மற்றும் கோளாறுகளை நீக்கி, குடல் மற்றும் நமது தலை பகுதியில் இருக்கும் எலும்பினை வலுப்படுத்துகிறது.

**ஆட்டு இறைச்சியில், அதனுடைய கால்களை சூப் வைத்து குடித்து வந்தால், நம்முடைய எலும்புகள் மற்றும் கால்கள் நல்ல ஆற்றலை பெறுகிறது.

**ஆட்டிறைச்சியை வாரம் ஒரு முறை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால், நம்முடைய பார்வை கோளாறுகள் சரியாகி, கூர்மையான பார்வை மற்றும் நமது கண்களுக்கு மிகுந்த வலிமை கிடைக்கிறது.


**ஆட்டின் மூளையானது, தாது விருத்தியை ஏற்படுத்துகிறது. மேலும் கண்ணுக்கு குளிர்ச்சி, அதிக நினைவாற்றல், வலிமையான மூளை போன்ற நன்மைகளுக்கு ஆட்டின் மூளை பயன்படுகிறது.

**ஆட்டின் மூளைப் பகுதியை உணவில் சேர்த்துக் கொண்டால் கபத்தை நீக்கி, மார்பு பகுதியில் இருக்கும் புண்களை குணப்படுத்தி, மார்பக பகுதியை வலிமை அடையச் செய்கிறது.

**ஆட்டின் இதயத்தை சமைத்து சாப்பிட்டு வந்தால், நமது இதயத்திற்குப் நல்ல பலம் கிடைக்கும். மேலும் நமது மன ஆற்றல் அதிகரிப்பதற்கு நல்ல பலனைத் தருகின்றது.

**ஆட்டின் நுரையீரல் மற்றும் கொழுப்புகள் நமது உடலின் வெப்பத்தை குறைத்துக் குளிர்ச்சியை ஏற்படுத்துவதுடன், நுரையீரல் மற்றும் இடுப்புப் பகுதிக்கு நல்ல வலிமையைத் தருகிறது.

**ஆட்டு இறைச்சியானது, நமது சிறுநீரக சுரப்பியை வலிமை அடையச் செய்து, ஆண் குறியின் வலிமையை மேம்படுத்துகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.